Thanimayil Amarnthen - A Poem
I think this is the most recent one I wrote. Written in Oct 2006 :-) தனிமையில் அமர்ந்தேன் வாழ்க்கையை மதிப்பிட்டேன் நினைவுகள்.. நிகழ்வுகள்.. அனுபவங்கள்.. கனவுகள்.. (என் முன்) தோன்றின . . மறைந்தன . . கடந்த காலம் வீணான உயிர் மூச்சாய்த் தோன்றிட தோன்றியது வருங்காலம் வீணாகும் உயிர் மூச்சாய் அழகான ஓர் அமைதி மனம் எங்கும் பரவ கடந்ததும் இனி வருவதும் வாழ்வும் அதன் முடிவும் (நின்றன) சமமாய் என் முன்னே