Posts

Showing posts with the label வைணவம்

வாமனனின் நடை

 *வாமனனின் நடை* இன்று வாமன ஜெயந்தி. வாமனனை ஆழ்வார்கள் அனுபவித்த சில பாசுரங்களை கீழே நாமும் அனுபவிப்போம். திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமடலில் வாமன அவதாரத்து நிகழ்வுகளை நம் கண் முன்னே அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். தன் உருவத்தை மாற்றிக் கொண்டு தான் யார் என்பதை மறைக்க தன் நடை உடை பாவனையையும் மாற்றிக் கொண்டு தன்னுடைய சொத்தான உலகத்தையே பெருமான் யாசித்துப் பெற்றது எத்தனை அழகு. மாவலி நம்பும் வண்ணம் வஞ்சித்து நெஞ்சுருக்கி நடந்து வந்தாராம். என்ன அழகான தமிழ்! மற்றன்றியும், தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர், மன்னும் குறளுருவின் மாணியாய், - மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை நாச்சியார் திருமொழியில் திருவரங்கனுக்காக பத்த...

பொய்கை ஆழ்வார் - 2

 பொய்கை ஆழ்வார் பாகம் 2 பாசுரம் # 10 மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும், விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் - எண்ணில் அலகளவு கண்ட சீராழியாய்க்கு,  அன்று இவ்வுலகளவும் உண்டோ உன் வாய்? இந்தப் பாசுரத்திலோ அண்டம் முழுவதும் விழுங்கிய அவன் வாய் அப்பொழுது எவ்வளவு பெரியதாய் இருந்தது என்று ஆச்சரியத்துடன் வினவுகிறார்.  அதே சமயம் எண்ணிலடங்கா கல்யாண குணங்களை உடைய கருணைக் கடலான எம்பெருமான் சிறிய வாயினாலே பெரிய உலகங்களை எல்லாம் எளிதில் விழுங்க வல்ல அபார சக்தி கொண்டவன் என்பதே கருத்து. இதில் இன்னும் ஒரு படி மேலே போய் கீழ் வரும் பாசுரத்தில் மண்ணை உண்டவன் வயிறு எப்படி யசோதை தந்த வெண்ணை உண்டு நிறைந்தது என்று கேட்கிறார். இங்கே அவன் பெருமைக்கு எதுவும் ஈடாகாது ஆனால் பக்தர்களுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு வெண்ணை திருடுதல் போன்றன செய்து அவர்களோடு தன்னை சம்பந்தப் படுத்திக் கொள்கிறான் என்றே கொள்ள வேண்டும். பாசுரம் # 92 வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய் தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள் மண்ணை உமிழ்ந்த வயிறு. முத்தாய்ப்பாக அதே சேஷ்டிதத்தைப் பற்றி இந்தப...

பொய்கை ஆழ்வார் - 1

 ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் என்று முவர் அழைக்கப் பட்டாலும் அவர்களுள் முதலானவர் பொய்கை ஆழ்வார். பொய்கை ஆழ்வார் தம் முதல் திருவந்தாதியில் சில பாசுரங்களில் சுவையான வினாக்களை எழுப்பி சில முரண்பாட்டுக்களையும் சுட்டிக் காட்டுகிறார். இவை ஆழ்வார் ஐயத்தால் எழுப்பியது போல் முதல் பார்வையில் தோன்றினாலும் ஆழ்ந்து பார்க்கையில் அவருடைய தேடலும் அவர் பெருமானையும் அவர் அவதாரங்களையும் நன்கு அனுபவித்ததும் தெரியும். பெருமான் ஒரு வரையறைக்குள் அடங்காதவன் என்பதும் பல அமாநுஷ்யமான சேஷ்டிதங்களைச் செய்து தன் பரத்துவத்தை சாதித்தவன் என்பதுமே மேலோட்டமாக ஆழ்வார் சொல்ல வந்தது. மேலே சில பாசுரங்களை ஒவ்வொன்றாக அனுபவிப்போம் பாசுரம் # 9 பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு,  அன்று உன் ஒரு கோட்டின் மேல்கிடந்ததன்றே, -  விரிதோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க  விண்துளங்க, மாவடிவில் நீயளந்த மண்? இதில் வராக அவதாரத்தையும் திருவிக்கிரம அவதாரத்தையும் ஆழ்வார் அனுபவிக்கிறார் அதாவது திருவிக்கிரமனாய் மிகப் பெரிய வடிவு கொண்டு திருவடியை நீட்டி அளந்த அதே உலகம் வராஹ அவதார காலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு சிறு மணி போல...

ஆழ்வார்கள் அனுபவம்

 ஆழ்வார்கள் அனுபவம் பற்றி எழுத வேண்டும் என்று எனக்குள்ளே சில நாட்களாக ஏதோ ஒரு உந்துதல். ஆச்சார்யர்கள் சொல்லாததோ? வைணவம் காணாததோ? இதில் எதை நீ சொல்லப் போகிறாய் என்று ஒரு குரல் நியாயமாகத் தடுத்தாலும் முயற்சியைத் தொடர்ந்தேன். முதல் கட்டுரை பொய்கை ஆழ்வாரைப் பற்றியது.

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு

நீண்ட தமிழ் பதிவு .. முகநூலில் என்னுடைய முதல் பதிவும் கூட.  இந்தப் பதிவு எழுத ஆரம்பித்து பாதி முடிந்த பிறகு என்னை ஓரு பயம் சூழ்ந்து கொண்டது. நம்மாழ்வார் எவ்வளவு பெரியவர் அவரைப் பற்றி நாம் எழுதுவதா என்று! இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு எழுதி முடித்து விட்டேன். யாமறிந்த புலவரிலே வள்ளுவன் போல் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் யாங்கனுமே கண்டதில்லை .. நமக்குத் தெரிந்த வரிகள். இது சடகோபரைப் (நம்மாழ்வார்) போல் என்று தொடங்கி இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. நான் நம்மாழ்வார் என்கிற சடகோபரைப் பற்றி முழுதாய் அவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசுரங்களைப் படித்து இன்னும் ஆராயவில்லை. நான் படித்த சிலவற்றுள் அதற்கு முன்னோர்கள் எழுதி வைத்த விளக்கங்களில் இருந்து சிலவற்றை படித்ததில் எனக்கு எட்டிய அளவில் சொல்கிறேன். வேதத்தை தமிழ்ப்படுத்தி என்னை மனம் கவர்ந்த ஈசனாம் திருமாலை மட்டுமே போற்றும் பாடல்கள் இவை என்பதை சில நிமிடங்கள் அப்புறப்படுத்தி வைத்து அப்பாடல்களில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த தத்துவப் பொருட்களையும் சிறிது நேரம் ஆராயாமல் அவற்றிலுள்ள தமிழை மட்டும் கொஞ்சம் பார்ப்போம்....

எங்கள் எதிராசன்

It is ages since I sat and wrote a few lines.. After almost a year full of hearing about his deeds and visiting his shrines in several temples, somehow couldn't resist writing a few lines on Bhagavad Ramanujar on his 1000th Thirunakshathram.. Vaazhi ethirasan! Vaazhi ethirasan! எங்கள் எதிராசன் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் மனதில் கோவில் கொண்ட அழகன் ஆலயக் கதவுகள் அனைவர்க்கும் திறந்திட  வழி வகுத்த முதல் தலைவன் வேதத்திற்கு புது விளக்கம் சொல்லி  விசிஷ்டாத்வைதம் தந்த அறிஞன் பாரதம் முழுதும் சோர்வின்றி நடந்து  வைணவம் வளர்த்த முனிவன் கலியுகத்தில் பக்தி தழைக்க  பல புதுமைகள் கொணர்ந்த நற்தலைவன்  எங்கள் எதிராசன் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் மனதில் கோவில் கொண்ட அழகன்!

Madurai Kallazhagar Temple visit

செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என் நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் நெஞ்சு முயிரும் அவையுண்டு  தானே யாகி நிறைந்தானே! In this pasuram Nammazhwar warns all poets who think of singing on Thirumaaliruncholai Kallazhagar as they are bound to be completely bowled over and subsumed.  Left with same feeling after returning from the temple yesterday. The moolavar here is holding all 5 weapons but yet his face is so calm and beautiful!