God?
Another Tamil Poem :-) நெருப்பில் இருக்கும் வெப்பம் நான் நீரில் இருக்கும் குளிர்ச்சி நான் பரந்து கிடக்கும் வானம் நான் எங்கும் நிறைந்த காற்றும் நான் மின்னல் கீற்றின் ஒளியும் நான் இடியாய் முழங்கும் ஒலியும் நான் மேகம் கொண்ட கருமை நான் வான வில்லின் வண்ணம் நான் மலையில் ஒலிக்கும் எதிரொலி நான் இலையில் தாங்கும் பனித்துளி நான் நிலவில் இருக்கும் களங்கம் நான் ஓடை நீரின் தெளிவும் நான் இயற்கையின் சிரிப்பில் இருப்பது நான் எங்கும் நிறைந்த பரம்பொருள் நான் உன்னில் இயங்கும் இயக்கமும் நான் உண்மை என்பது உண்மையில் நான்