The dilemma - in Tamil

The original version I wrote in Tamil which I attempted to translate in english


கடமைகள் உண்டு நிறைவேற்ற
உடமைகள் உண்டு இன்பம் தர
கொண்டதில் நிறைவு  ஒரு பக்கம்


கடமைகள் துறந்து புதுமையை நாடி


கற்றதை மறந்து உலகங்கள் கடந்து
பயணிக்கத் தூண்டும்  மறு பக்கம்



என்னை நான் ஆக்கியது என் அனுபவங்கள்
சந்தித்த மனிதர்கள் பயணித்த உலகங்கள்



விதைக்குள் தூங்கும் விருட்சங்கள் போல்
எனக்குள் தூங்கும் நிஜம் ஆகாத நிழல்கள்
கண் முன்னே விரியும் காணாத உலகங்கள்
நீர்க்கோல வாழ்வில் நிறைய வரும் உறவுகள்



இருந்தும் ..

உடமைகள் உண்டு இன்பம் தர
கடமைகள் உண்டு நிறைவேற்ற
கொண்டதில் நிறைவு ஒரு பக்கம்

Comments

Popular posts from this blog

A truly amazing person

Chennai Music season 2024 - Sriranjani's Sriranjani

India's date with the moon