Posts

Showing posts from July, 2017

மாற்றம்

மாறியது கண்ணாடியில் தெரியும் பிம்பம் மட்டுமல்ல .. நானும் வெற்றிகள் தந்த போதை தலை விட்டு தரை இறங்க தோல்விகள் பழகிப் போன வலிகளாய் ஒதுங்கி நிற்க தொலைந்து போய்க் கண்டு பிடித்த இன்பங்கள் மேலோங்க மாறியது கண்ணாடியில் தெரியும் பிம்பம் மட்டுமல்ல .. கடந்தது போல் வருவதும் நல்லதுக்கே என்று புன்னகையோடு காத்திருக்கும் நானும்!