A Tamil Poem - மறக்க முடியாத அந்த கடைசிப் பயணம்

A poem I wrote today.

புத்துணர்ச்சியுடன் புறப்பட்டேன்
உன்னுடன் பயணிக்க ..
நீண்டதொரு இடைவெளிக்குப் பின்
பூங்காற்று திரும்பியது
ஆனால் நான் எப்படி உன்னுடன்?
அந்தக் கடைசிப் பயணம்?

மறக்க முடியாத அந்த கடைசிப் பயணம்
பரபரப்பான மாலை நேரம்
சிக்கி நின்ற போக்குவரத்து
அமரர் ஊர்தியின் நிற்காத
ஹாரன் சத்தம்
மூடாத பின் புறம் வழி
முளைத்த பல முகங்கள்
மூங்கில் படுக்கையில் நீ
அருகில் நானும் தீச்சட்டியும்
உன் முகத்தில் தான் எத்தனை அமைதி?

மறக்க முடியாத அந்த கடைசி பயணம் ..

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
திரும்பாது உன் தெய்வீக முகம்
கடைசி முறை பார்த்து
தீயிலிட்டு அன்று திரும்பினேன்

நான் எப்படி இன்று உன்னுடன்
மறுபடி புறப்பட்டேன்?

Comments

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Krishna nee begane baaro …

From Dadagiri to Gandhigiri