Posts

Showing posts from 2010

more poetry ..

Another poem on same photo http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/ கடல் அலைகள் தாவி வ்ந்து கரை தழுவும் நீல வானம் தரையோடு தொலைவில் சேரும் மெல்லிய வெளிச்சத்தில் தெரியும் நான் பயணிக்காத புது உலகம்

more poetry

Inspired by this photo http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/ மாலை மயக்கம் சில நேரம் மனதில் சலனம் தந்தாலும் பரந்து கிடக்குது எதிர் காலம் பயணம் இருக்குது வெகு தூரம்

Untitled Tamil poem

A poem after a long time inspired by this photo in flickr http://www.flickr.com/photos/ashoksundar/4579838183 அஸ்தமிக்கும் சூரியன் வரைந்த அழகான ஓவியம் கவிதையாய்ப் படர்ந்து நிற்கும் வான் எங்கும் கடல் அலைகள் ஆர்ப்பரித்து கரையோடு கதை சொல்ல சாட்சியாய் ஒதுங்கி நிற்கும் ஒற்றை மரம்

God?

Another Tamil Poem :-) நெருப்பில் இருக்கும் வெப்பம் நான் நீரில் இருக்கும் குளிர்ச்சி நான் பரந்து கிடக்கும் வானம் நான் எங்கும் நிறைந்த காற்றும் நான் மின்னல் கீற்றின் ஒளியும் நான் இடியாய் முழங்கும் ஒலியும் நான் மேகம் கொண்ட கருமை நான் வான வில்லின் வண்ணம் நான் மலையில் ஒலிக்கும் எதிரொலி நான் இலையில் தாங்கும் பனித்துளி நான் நிலவில் இருக்கும் களங்கம் நான் ஓடை நீரின் தெளிவும் நான் இயற்கையின் சிரிப்பில் இருப்பது நான் எங்கும் நிறைந்த பரம்பொருள் நான் உன்னில் இயங்கும் இயக்கமும் நான் உண்மை என்பது உண்மையில் நான்