மலைகளில் இறைவன் காட்டும் உருவம்
மலைகளில் இறைவன்
காட்டும் உருவம்
அறிவதில் உள்ளம்
பேரின்பம் கொள்ளும்
மெல்லிய காற்றில்
மலர்களின் வாசம்
சொர்க்கம் என்பதன்
அர்த்தம் சொல்லும்
ஏற்றமும் தாழ்வும்
உற்ற பாதைகள்
வாழ்க்கையின் தன்மையை
எளிதாய்க் காட்டும்
தடைகள் கடந்து
தாவும் அருவிகள்
ஆற்ற வேண்டிய
கடமையை உணர்த்தும்
கண் முன் விரியும்
காட்சிகள் யாவும்
நான் என்னும் சொல்லின்
அனர்த்தம் உணர்த்தும்
காட்டும் உருவம்
அறிவதில் உள்ளம்
பேரின்பம் கொள்ளும்
மெல்லிய காற்றில்
மலர்களின் வாசம்
சொர்க்கம் என்பதன்
அர்த்தம் சொல்லும்
ஏற்றமும் தாழ்வும்
உற்ற பாதைகள்
வாழ்க்கையின் தன்மையை
எளிதாய்க் காட்டும்
தடைகள் கடந்து
தாவும் அருவிகள்
ஆற்ற வேண்டிய
கடமையை உணர்த்தும்
கண் முன் விரியும்
காட்சிகள் யாவும்
நான் என்னும் சொல்லின்
அனர்த்தம் உணர்த்தும்
Comments