Posts

Best Prayer song

Was sitting in my daughter's school listening to the prayer which somehow left me wondering what is the best prayer song I have heard .. I guess it takes 30+ ye ars before one starts thinking what to ask in a prayer .. and may be another 20-30 to understand that the beauty lies in not asking!

more poetry ..

Another poem on same photo http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/ கடல் அலைகள் தாவி வ்ந்து கரை தழுவும் நீல வானம் தரையோடு தொலைவில் சேரும் மெல்லிய வெளிச்சத்தில் தெரியும் நான் பயணிக்காத புது உலகம்

more poetry

Inspired by this photo http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/ மாலை மயக்கம் சில நேரம் மனதில் சலனம் தந்தாலும் பரந்து கிடக்குது எதிர் காலம் பயணம் இருக்குது வெகு தூரம்

Untitled Tamil poem

A poem after a long time inspired by this photo in flickr http://www.flickr.com/photos/ashoksundar/4579838183 அஸ்தமிக்கும் சூரியன் வரைந்த அழகான ஓவியம் கவிதையாய்ப் படர்ந்து நிற்கும் வான் எங்கும் கடல் அலைகள் ஆர்ப்பரித்து கரையோடு கதை சொல்ல சாட்சியாய் ஒதுங்கி நிற்கும் ஒற்றை மரம்

God?

Another Tamil Poem :-) நெருப்பில் இருக்கும் வெப்பம் நான் நீரில் இருக்கும் குளிர்ச்சி நான் பரந்து கிடக்கும் வானம் நான் எங்கும் நிறைந்த காற்றும் நான் மின்னல் கீற்றின் ஒளியும் நான் இடியாய் முழங்கும் ஒலியும் நான் மேகம் கொண்ட கருமை நான் வான வில்லின் வண்ணம் நான் மலையில் ஒலிக்கும் எதிரொலி நான் இலையில் தாங்கும் பனித்துளி நான் நிலவில் இருக்கும் களங்கம் நான் ஓடை நீரின் தெளிவும் நான் இயற்கையின் சிரிப்பில் இருப்பது நான் எங்கும் நிறைந்த பரம்பொருள் நான் உன்னில் இயங்கும் இயக்கமும் நான் உண்மை என்பது உண்மையில் நான்

Life goes on

When the Tides get rough and life gets tough Just hang on for life goes on Let the spirit of a mountain be the spirit of your life Let the song of a river be the song on your lips Clouds may pass, leaving you lost Endure my dear troubles never last!

A Tamil poem on Bhagavad Gita

This one has been going on in the back of my mind for a few weeks. Finally managed to close this around Saraswathi Pooja. Could not get the right "Sa" in the last para, purists please forgive me. I did start writing something about Saraswathi and Ayudha pooja but have not had the patience to complete it. வேதம் நான்கின் சாறெடுத்து உபநிடதங்கள் பொருள் சேர்த்து எளிமையாக வழி வகுத்து கண்ணன் தந்த ஆரமுது ஆடைகள் போல் உடல் மாறும் அழியாதது ஆன்மா என்று அழகான விளக்கம் தந்த அச்சுதனின் அறிவமுது பக்தியென்றும் ஞானமென்றும் மார்க்கங்கள் இருந்தாலும் இவையேதும் அறியாத பாமரமனும் முக்தி பெற இனிமையான வழி சொன்ன பரந்தாமன் பெரும் படைப்பு பலனைப் பற்றி எண்ணாமல் கடமை தன்னை செய்து வந்தால் கண்ணன் அடி ஸேர்ந்திடலாம் என்று புதுமையான பொருள் சொன்ன வாசுதேவன் நற்படைப்பு