Monday, September 28, 2009

A Tamil poem on Bhagavad Gita

This one has been going on in the back of my mind for a few weeks. Finally managed to close this around Saraswathi Pooja. Could not get the right "Sa" in the last para, purists please forgive me. I did start writing something about Saraswathi and Ayudha pooja but have not had the patience to complete it.

வேதம் நான்கின் சாறெடுத்து
உபநிடதங்கள் பொருள் சேர்த்து
எளிமையாக வழி வகுத்து
கண்ணன் தந்த ஆரமுது

ஆடைகள் போல் உடல் மாறும்
அழியாதது ஆன்மா என்று
அழகான விளக்கம் தந்த
அச்சுதனின் அறிவமுது

பக்தியென்றும் ஞானமென்றும்
மார்க்கங்கள் இருந்தாலும்
இவையேதும் அறியாத
பாமரமனும் முக்தி பெற
இனிமையான வழி சொன்ன
பரந்தாமன் பெரும் படைப்பு

பலனைப் பற்றி எண்ணாமல்
கடமை தன்னை செய்து வந்தால்
கண்ணன் அடி ஸேர்ந்திடலாம் என்று
புதுமையான பொருள் சொன்ன
வாசுதேவன் நற்படைப்பு

No comments: